பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107. இரவு அச்சம் (இரத்தற்கு - யாசிப்பதற்கு - அஞ்சுதல் வேண்டும்) 1. கரவாது உவந்துஈயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி யுறும். 1061

(ப. ரை) கரவாது - மறைக்காமல், உவந்து - மன மகிழ்ந்து, ஈயும் . ஈதல் செய்கின்ற, கண் - கண்கள், அன்னார் கண்ணும் . போன்ற சிறந்தவரிடத்திலும், இரவாமை - யாசிக்காமல் இருப்பது, கோடி - கோடி மடங்கு, உறும் . நல்லதாகும்.

(கரை) தமக்கு உள்ளதை மறைக்காமல் கொடுக்கும் கண் போன்று சிறந்தவரிடத்தும் வறு க ம யால் இரவாதிருத்தல், கோடி மடங்கு நல்லதாகும்.

2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றி யான். 1062

(ப.ரை) உலகு - உலகத்தினை, இயற்றியான் . உண்டாக்கியவன் என்பான், இரந்தும்-(உலகில் வாழ்வோர்) யாசித்தும், உயிர் . உயிரினைக் காத்து, வாழ்தல் . வாழ்வதை, வேண்டின் - விரும்பி விதித்திருப்பானாகில், பரந்து . தானும் அவர்களைப் போல எங்கும் திரிந்து, கெடுக அழியக் கடவானாக.

(கரை) உலகத்தினை உண்டாக்கியவன் வாழ் வார்க்கு முயற்சி செய்து வாழ்வதல்லாமல் யாசித்தும் உயிர் வாழ்தலை விரும்பி வி தி த் த ா ன யி ன் அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் திரிந்து கெடக் கடவன். $ . .

3. இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும்

வன்மையின் வன்பாட்டது இல். 1063 (பரை) இன்மை வறுமையால் உண்டாகும், இடும்பை . துன்பத்தினை, (முயன்று நீக்க எண்ணாமல்) ,

தி,தெ.-29