பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

10. செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு

உயற்பாலது ஒரும் பழி. (ப-ரை) ஒருவற்கு-ஒருவனுக்கு, செயற்பாலது.செய்ய வேண்டிய தன்மையுடையது, அறனே அறச் செயல்களே யாகும், உயல் நீக்க வேண்டிய,பாலது -தன்மையுடையது, பழி - தீய (பழியான) செயல்களேயாகும்.

|க.ரை! ஒருவர்க்குச் செய்யும் தன்மையுடையது அறச் செயல்களேயாகும். நீக்க வேண்டிய தன்மையுடையது தீயவைகளான செயல்களே யாகும்.

தி. தெ-3