பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற இயல்

5. இல்வாழ்க்கை

இல்லறத்தின் சிறப்பும், இல்வாழ்வானுடைய பண்புகளும் கடமைகளும்)

1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

கல்ஆற்றின் கின்ற துணை.

(ப-ரை) இல்வாழ்வான்-இல்லறத்தினை மேற்கொண்டு வாழ்வான், என்பான் - என்று சொல்லப்படுபவன், இயல்புடைய - இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும், மூவர்க்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று வகையினர்க்கும், நல் - நல்ல, ஆற்றின் - ஒழுக்க வழிகளில், நின்றதுணை நிலையாக இருக்கும் துணையாவான்.

[க - ரை) இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூன்று திறத்தார்க்கும் நல்லொழுக்க நெறியில் நின்ற சிறந்த துணையாக இருப் பவுனாவான்.