பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

(க-ரை) மெலியார் தமது குறையினனச் சொல்லிய வுடனேயே சான்றோt பயன்படுவர். மற்றைய கயவ t கரும்புபோல நைய நெருக்கியபோதுதான் பயன்படுவர்.

9. உடுப்பது உம் உண்பது உம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகுங் கீழ். 1079

(ப-ரை) உடுப்பது உம் . பிறர் நன்கு உடுத்திக் கொள்ளுவதையும், உண்பது உம் - உண்ணுவதையும், கீழ் . கயவன், காணின் . காண்பாணானால், (மனம் பொறாமல், பிறர்மேல் - அத்தகைய மற்றவர்கள்மீது, (குற்றம் இல்லை என்றாலும்) வடு - குற்றத்தினை, காண - தானே உண்டாக்கிக் காட்டுவதில், வற்றாகும் . வல்லவனாவான்.

(க-ரை) மற்றவர்கள் செல்வத்தால் நன்கு உடுத்திக் கொள்ளுவதையும் உண்ணுவதையும் சுயவன் கண்டு விட்டால், அவற்றைப் பொறாமல் அவர்மீது குற்றம் இல்லையென்றாலும் உண்டாக்கிச் சொல்வதில் வல்லவனா а тат,

10. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் விரைந்து. 1080

(ப-ரை) கயவர் - கீழ்மக்கள், ஒன்று உற்றக்கால் . 'யாதானுமொரு துன்பம் தமக்கு வந்து விட்டால், விரைந்து - விரைவாகச் சென்று, விற்றற்கு - தம்மைப் பிறரிடம் விற்பதற்கு, உரியர் . உரியவராவர் | அதனையன்றி, எற்றிற்கு - வேறு எத்தொழிலுக்கு, உரியர் . உரியவராவர்?

(க-ரை! கயவர் தமக்கு யாதானுமொரு துன்பம் வந்த போது தம்மைப் பிறர்க்கு விரைவாக விற்றற்கு உரியt; அதுவன்றி வேறு எத்தொழிலுக்கு உரியர்: