பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473

லுடைய, முகம் - முகத்தினை, ஒத்தியாயின் - ஒத்திருக்க விரும்புவாயானால், பலர் . பலரும், காண காணும்படி, தோன்றல் - தோன்றாதிருப்பாயாக.

(கரை) மதியே! மலரீபோன்ற கண்ணினையுடைய இப்பெண்ணின் முகத்தினை நீ ஒத்திருக்க விரும்புவா கானால் யான் மட்டும் காணத் தோன்றுவாயாக! பலரும்

காணுமாறு தோன்றாதிருப்பாயாக.

10. அனிச்சமும் அன்னத்தின் துரவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம். i. i20

(டி-ரை அனிச்சமும் . மென்மைத் தன்மை நிறைந்த அனிச்சப்பூவும், அன்னத்தின் - அன்னப்பறவையினுடைய, து வியும் . மெல்லிய இறகும், மாதர் - பெண்களின் அடிக்கு . பாதங்கட்கு, நெருஞ்சிப் பழம் - முள் நிறைந்த நெருஞ்சிப்பழம் போலத் துன்பம் செய்யும்.

இக-ரை) மென்மையான அனிச்சப்பூவும் அன்னப் பறவையின் சிறகும் ஆகிய இரண்டும் மாதர் அடிகளுக்கு நெருஞ்சிப் பழத்தினைப் போல வருத்தம் செய்யும்.

113. காதற் சிறப்பு உரைத்தல் இதலைமகனும் தலைமகளும் காதல் மிகுதியினைக் கூறல்;

1. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வால்எயிறு ஊறிய நீர். Í 12 Í

பே-ரை பணி . மென்மையான, மொழி.சொல்லினை அடைய இப்பெண்ணினது, வால் . வெண்மையான, எயிறு பற்களில், ஊறிய நீர் - ஊறிவரும் நீரானது, பாலொடு - பாலோடு, தேன். தேன், கலந்தற்றே - கலந்த அவை போன்று இனிமையானதாகும்.