பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

அலரும் நானும் வகையில் பிரிந்திருப்பாராயின், நாம் அயலார் கூறும் அலருக்கு நாணுதல் கூடுமோ?

10. தாம்வேண்டின் கல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்.இவ் ஆர். 1150

|ப-ரை யாம் வேண்டும் - (அவருடன் செல்லுவதற்கு யாம் விரும்பிய, கெளவை . அலரினை, இவ்வூர் எடுக்கும். இந்த ஊர் உண்டாக்குகின்றது(ஆதலால்), காதலர் - எமது காதலர், வேண்டின் - யாம் வேண்டி விரும்பினால், தாம்’ நல்குவர் - தாமும் விரும்பி உடன்பட்டு விடுவார்.

(க-ரை) உடன் போவதற்குக் காரணமாக அலரை இவ்வூர் தானே எடுக்கின்றது. இனிக் காதலர் தாமும் யாம் விரும்பியபடியே செய்வர்; அதனால் இந்த அலர் தமக்கு நன்மையாய் வந்தது.