பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

513

கனவுக் காலத்தில், காண்டலின் - காணுவதால், என் . உயிர் உண்டு - உயிர் போகாமல் இருக் ولاس (65 gي 3ة هrة கின்றது.

[க-ரை நனவில் வந்து அன்பு செய்யாதிருக்கும் கன வரை யான் கனவில் கண்ட காட்சியாலே என்னுடைய உயிர் இருந்து வருகின்றது.

4. கனவினான் உண்டாகும் காமம் கனவினான்

நல்காரை காடித் தரற்கு. 1214

|ப.ரை நனவினான் . நனவுக் காலத்தில் என் னிடம் வந்து, நல்காரை . அன்பினைப் பெய்யாத தலைவரை, நாடி - அறிந்து கொண்டு வந்து, தரந்கு தருவதால், கனவினான் . அக்கனவின் கண்ணே, காமம் - உண் டாக்கும் இன்பம் எனக்கு உண்டாகின்றது.

(க-ரை நனவுக் காலத்தில் வந்து அன்பு காட்டாத எனது தலைவரை அவர் சென்ற இடத்திலிருந்து இங்கு கொணர்ந்துக் காட்டுவதால் கனவில் காமமானது உண்டாகின்றது.

5. கனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்

கண்டபொழுதே இனிது. 12:5

(ப.ரை நனவினான் பிரியாத முன்பு நனவின் கண், கண்டது.ாஉம் - காதலரைக் கண்டு நுகர்ந்த இன்பம் தானும், ஆங்கே - கண்ட அப்போதே இனிதாக இருந்தது. கனவும் தான் - இன்று கனவினில் காதலரைக்கண்டுதுகர்ந்த இன்பமும், கண்ட பொழுதே இனிது - கண்ட அப்போதே இனிதாக இருந்தது.

|க.ரை நனவுப் பொழுதில் அவரைக் கண்டு துகர்ந்த

காம இன்பம் தானும் அப்போது இனிதாக இருந்தது.

இப்போது நான் கனவில் கண்டு நுகர்ந்த இன்பமும் அது

தி. தெ.-33