பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123. பொழுது கண்டு இரங்கல்

(மாலைப் பொழுது வந்த போது தலைமகள்

இரந்து வருந்தல்)

1. மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்

வேலைt வாழி பொழுது. 122 i

(ப.ரை) பொழுது-மாலைப் பொழுதே! நீ மாலையோ. நீ முன்னாளில் வந்த மாலைப் பொழுதோ, அல்லை . அல்ல, மணந்தார் . காதலரை மணந்த பெண்களது, உயிர் - உயிரை, உண்ணும் . உண்ணுகின்ற, வேலை . இறுதிக்காலமாக இருக்கின்றாய், வாழி . நீ வாழ்வாயாக!

(கரை) மாலைப் பொழுதே நீ முந்தைய நாட்களில் வந்த மாலைப்பொழுது . அல்ல; அந்த நாளில் காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் முடிவுக் காலமாய், இப்போது இருக்கின்றாய்.

2. புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்

வன்கண்ண தோகின் துணை. 1222

(ப-ரை) மருள் . மயங்கிய, மாலை மாலைப் பொழுதே, புன்கண்ணை ஒளியிழந்து இருக்கின்றாய். வாழி - வாழ்க! நின் - உனது, துணை துணையும், எம் . எம்முடைய, கேள்போல் . துணைவரைப் போல, வன் ன்ெனதோ - அன்பின்றிக் கொடுமையான தன்மை புடையதோ?

": க.ரை) மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப்போல ஒளியிழந்த சுண்களையுடையதாக இருக் கின்றாய்; உன் துணையும் எம்முடைய துணையே போல் வன்கன்மையுடையதோ? இரக்கமற்றதோ?