பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வென்றால்) தம்.தமது, மக்கள்.குழந்தைகள், சிறு-சிறிய, கை-கைகளால் அளாவிய-அளாவப்பட்ட கலைக்கப்பட்ட) கூழ்-சோறு, என்பதாகும்.

(க-ரை) தமது மக்கள் சிறு கைகளால் பிசைந்த சோறானது சுவையான அமிழ்தத்தினையும் விட மிகவும் இனிமையானதாக இருக்கும்.

5. மக்கள் மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

(ப-ரை உடற்கு இன்பம் ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாக இருப்பது, மக்கள்.தமது குழந்தைகளுடைய, மெய் திண்டல். உடம்பினைத் தொடுதலாகும், செவிக்கு இன்பம்.காதுகளுக்கு இன்பம் என்பது, அவர் சொல் கேட்டல்-அவர்களுடைய இனிய சொற்களைக் கேட்ட லாகும்.

[s-owl ஒருவனுடைய உடம்புக்கு இன்பமாவது தனது மக்களுடைய உடம்பினைத் தொடுதலாகும். அவர் களுடைய சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாகும்.

6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்,

(ப.ரை குழல் இனிது.குழலிசை இனிதாக இருக் கின்றது, யாழ் இனிது-யாழிசை இனிதாக இருக்கின்றது, என்ப.என்று கூறுவார்கள், (யாரென்றால் தம்-தமது, மக்கள்.குழந்தைகளுடைய, மழலைச் சொல்.மழலைச் சொற்களை, கேளாதவர்.கேட்டறியாதவர்கள்.

(கரை) தமது குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதவர்கள் குழலோசையும் யாழோசையும் இனிமையாக இருக்கின்றன் என்று கூறுவர்.