பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

7. தங்தை மகற்குஆற்றும் கன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல். (ப-ரை தந்தைதைகப்பனார், மகற்கு-தனது மகனுக்கு, ஆற்றும்.செய்ய வேண்டிய, நன்றி-நன்மையான கடமை, (யாதென்றால் அவையத்து-கற்றோர் இருக்கும் சபையில், முந்தி.சிறப்பாக முற்பட்டு, இருப்ப-இருக்குமாறு, செயல்செய்வதாகும்.

(க-ரை) தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதென்றால் கற்றவர் நிறைந்த அவையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும்.

8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.

(ப.ரை) தம் - தம்முடைய, மக்கள்.பிள்ளைகளின், அறிவுடைமை - அறிவுடைமையானது, மா - பெரிய, நிலத்து.பூமியில், மன்-நிலைத்திருக்கும், உயிர்க்கெல்லாம். உயிர்சளுக்கெல்லாம், தம்மின் இனிது-தமக்கு இனிமையாக இருப்பதைவிட இன்பமானதாக இருக்கும்.

(கரை) தமது மக்களுடைய அறிவுடைமையானது தமக்கு உண்டாக்கும் இன் பத்தினைவிட உலகத்து உயிர் களுக்கெல்லாம் இனிமையானதாக இருக்கும்.

9. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

(ப-ரை) ஈன்ற பெற்றெடுத்த, பொழுதின்-காலத்தில் மகிழ்ந்ததைவிட, பெரிது.மிகப் பெரிதாக, உவக்கும். மகிழ்ச்சியடைவாள், (யாரென்றால்) தன் மகனை. தனது மகனை, சான்றோன்.எல்லா வகையிலும் மேலான தன்மைகள் நிறைந்தவன், எனக் கேட்ட-என்று பெரியோர் கள் சொல்லக் கேட்ட, தாய்-தாய்.