பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4?

புன்மையான கண்ணிரே, பூசல் தரும். அவர் அன்பினை எல்லோரும் அறியுமாறு செய் யும்.

(க-ரை) அன்பிற்கு அடைத்து வைக்கப்படுகின்ற தாழ்ப்பாள் இல்லை. அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன் பிணைப் பெற்ற வரது துன்பத்தினைக் கண்டபோதே வெளிப்படுகின்ற கண்ணிரே அன்புடையவரது உள்நின்ற அன்பினை எல்லோரும் அறியுமாறு காட்டிவிடும்.

2. அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார்

என் பும் உரியர் பிறர்க்கு.

(ப-ரை) அன்பு இலார் . அன்பு இல்லாதவர்கள், எல்லாம் . எல்லாப் பொருள்களினாலும், தமக்கே உரியர் - தங்களுக்கே உரியவர்கள் ஆவார்கள், அன் புடையார்-அன்பினைக் கொண்டிருப்பவர்கள், என்பும். தம்முடைய எலும்பினாலும், (உடம்பாலும்) பிறர்க்கு உரியர்.மற்றவர்களுக்கும் பயன்படுபவர்கள் ஆவார்கள்.

(க-ரை) அன்பில்லாதவர்கள் பிறர்க்குப் பயன் படாமையால் எல்லாப் பொருள்களாலும் தமக்கே உரிய வர்கள் ஆவார்கள். அன்புடையவர்கள் தம்முடைய எலும்பினாலும் பிறர்க்கு உரியவர்கள் ஆவார்கள்.

3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

(ப-ரை) ஆர் . பெறுதற்கரிய, உ யி ர் க் கு - மக்களு யிர்க்கு, என்போடு - எலும்புடைய உடம்போடு, இயைந்தபொருந்திய, தொடர்பு - தொடர்பினை, அன்போடு இயைந்த - அன்புடனே ஒன்றுபட்டு வந்த, வழக்கு - வழி யினாலாகிய பயனேயாகும், என்ப - என்று கூறுவார்கள்.

(க-ரை) பெறுதற்கரிய மக்களுயிர்க்கு எலும்புடைய உடம்போடு பொருந்திய தொடர்பினை, அன்புடனே பொருந்துவதற்கு வந்த வழியினாலாகிய பயனாகும் என்று அறிந்தோர் கூறுவர்.