பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

4. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

(ப-ரை) அன்பு - அன்பு என்பது, ஆர்வமுடைமை . மற்றவர்களிடத்தில் விருப்பம் உள்ளதை, ஈனும் . உண்டாக் கும், அது - அந்த விருப்பம், நண்பு - நட்பு, என்னும் எனப் படும், நாடா அளவில்லாத, சிறப்பு . சிறப்பினை, ஈனும். கொடுப்பதாகும்.

(கரை) அன்பு என்பது பிறரிடத்தில் செல்லும் ஆர்வம் என்னும் விருப்பத்தினை உண்டாக்கும். ஆர்வம் என்னும் அந்த விருப்பம் நட்பு என்று சொல்லப்படுகின்ற அளவு கடந்த சிறப்பினைக் கொடுக்கும்.

5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ய வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

(ப.ரை) அன்பு - அன்பினை, உற்று - பெற்றவராகி, அமர்ந்த வழக்கு - பொருந்திய நெறியினாலான பயனே யாகும், என்ப என்று கூறுவார்கள், (எதனையென்றால்) வையகத்து . இந்த உ ல கி ல், இ ன் பு இல்லறத்தில் இன்பத்தினை, உற்றார் . நுகர்ந்தவர், எய்தும் சிறப்பு பெறுகின்ற சிறப்பினை.

(க-ரை) இவ்வுலகில் இல்லறத்தில் இன்பமடைந்து பெறுகின்ற பெருமையினை, அன்பினைப் பெற்றவராகிப் பொருந்திய வழியினாலான பயனேயாகும் என்று அறிந்தோர் கூறுவார்கள்.

8. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை. (ப-ரை) அன்பு - அன்பு, சார்பு - துணையாக இருப் பது, அறத்திற்கே - அறத்திற்குத் தான், என்ப . என்று கூறுவர், (யாரெனில்) அறியார் . அறியாமையுள்ளவர்கள், மறத்திற்கும் . அறத்திற்கு மாறான மறத்தினைப் போக்கு