பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

7. இனைத்துணைத்து என்பதொன்றுஇல்லைவிருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். (ப.ரை) வேள்வி . விருந்தோம்பல் என்னும் வேள்வி யின், பயன் - பயனாவது, இணைத் துணைத்து - இந்த அளவுதான், என்பது - என்பதாக, ஒன்று - ஓர் அளவினை, இன்லை - கொண்டதாக இல்லை, விருந்தின் - விருந்தினர் களுடைய, துணை - தகுதியென்னும் அளவே. துணை . அளவு என்பதாகும்.

(க-ரை விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்ற அளவினை உடையதில்லை. அது, விருந்தினரின் தகுதி அளவினையே அளவாகக் கொண்ட தாகும்.

8, பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார். (ப-ரை விருந்து ஓம்பி - நல்ல விருந்தினரைப் பேணிக் காத்து, வேள்வி . அத்தகைய வேள்வியின் பயனை, தலைப்படாதார் - பெற்றிராதவர்கள், பரிந்து - செல்வத் தினைப் பரிவுடன் போற்றி, ஒம்பி - காப்பாற்றி, (பின்னர் இழந்து) பற்றற்றேம் - தற்போது யாதொன்றும் இல்லா மற் போனோம், என்பர் - என்று சொல்லித் துன்ப மடைவர்.

(க-ரை] நல்ல விருந்தினரைப் பேணி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள், பொருளைக் காப்பாற்றி இழந்து இதுபோது பற்றுக்கோடு இல்லை யானோம், என்று இரக்கப்பட்டு வருந்துவர்.

9. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

(ப-ரை) உடைமையுள் . செல்வம் பெற்றிருந்தாலும், இன்மை - வறுமை இருப்பதென்பது, (யாதென்றால், !