பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

விருந்தோம்பல் - விருந்தினர்களைப் பேணுவதை, ஒம்பா . போற்றாமல் இகழ்வதாகும், மடமை - அறியாமையான இக்குணம், மடவார்கண் உண்டு - அறிவில்லாத பேதை களிடத்தில் காணப்படுவதாகும். -

(கரை) பொருள் பெற்றிருந்தும் வறுமை இருப்பது என்பது என்னவென்றால், விருந்தினரைப் போற்றா திருக்கும் மடமையாகும். அத்தன்மை, அறிவில்லாதவர் களிடத்தில் காணப்படுவதாகும்.

10. மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

(ப-ரை) அனிச்சம் - அனிச்சமலர், மோப்ப . மூக்கில் வைத்து மோந்தால்தான், குழையும் . வாடும் தன்மை யுடையதாகும், விருந்து விருந்தினர்களோ, முகம் முகமானது, திரிந்து - மகிழ்ச்சியின்றி வேறுபட்டு, நோக்கக் குழையும் - நோக்கும்போதே வாடிவிடுவர்.

(க-ரை) அனிச்ச மலரானது மூக்கில் வைத்து மோந் தால்தான் வாடுவதாகும். விருந்தினர்கள், முகமானது வேறுபட்டுப் பார்க்கும்போதே வாடிவிடுவர்.

10. இனியவை கூறல் இனிமையான சொற்களைச் சொல்லுதலும் பயனும்.)

1. இன்சொலால் ஈரம் அளை இப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (ப-ரை) இன் - இனிய, சொல் சொற்கள், (யாதென் றால்) ஈரம் - அன்புடன், அளைஇ பொருந்தி, படிறு . வஞ்சனை, இலவாம் - இல்லாதிருக்கின்ற, செம்பொருள் - செவ்விய, பொருளினை, 'அறத்தினை) கண்டார் -