பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

கண்டறிந்த மேலானவர்களுடைய, வாய்ச்சொல் - வாயில் வரும் இனிய சொற்களேயாகும். - }

(க-ரை) அறத்தினை அறிந்தவர்கள், வஞ்சனையிலா தவைகளாகி அன் போடு கலந்து சொல்லுகின்ற சொற்களே இன்சொற்கள் எனப்படுவதாகும்.

2. அகன்அமர்ந்து ஈதலின் கன்றே முகன்அமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

(ப-ரை) முகன் . முகம், அமர்த்து - மலர்ச்சியுடன், இன் . இனிய, சொலன் - சொல்லினைப் பேசுபவன், ஆகப் பெறின் - ஆக இருந்து விட்டால் (அது), அகன் - நெஞ்சம், அமர்ந்து - உவந்து, ஈதலின் - வறியவர்களுக்குக் கொடுக் கும் ஈகைத் தன்மையினை விட, நன்றே - நல்லதாகும்.

(க-ரை) முகமலர்ச்சியுடன் இனிய சொல்லினனாக இருந்து விட்டால், அத்தன்மை நெஞ்சம் உவந்து ஈகை யினைச் செய்வதை விடவும் நல்லதாகும்.

3. முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம். (ப-ரை முகத் தான் - முகத்தினால், அமர்ந்து-மலர்ந்து விருப்பப்பட்டு, இனிது . இனிமையாக, நோக்கி - நோக்கி , அகத்தான் ஆம் - மனத்துடனே பொருந்திய, இன் - இனிய , சொலினதே - சொற்களைச் சொல்லுவதே, அறம் - அறம் என்பதாகும். - ; :

(கரை) முகத்தினால் விரும்பி இனிமையாகப் பார்த்து மனத்துடன் பொருந்திய இனிய சொற்களைச் சொல்லு வதில் அமையப் பெற்றதே அறமாகும். -

4. துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. - - - - - ப-ரை யார் மட்டும் - எல்லோரிடத்திலும், இன்புறு உம் - இன்பத்தினையுண்டாக்கும், இன் - இனிய,

r. ·