பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

வரிக்கு சொற்களைச் சொல்லுபவர்களுக்கு, துன்புறு உம் . துன்பத்தினைக் கொடுக்கும், துவ்வாமை.வறுமையென்பது, இல்லாகும் இல்லையென்பதாகும்.

|க-ரை) எல்லோரிடத்திலும் இன்பத்தினை உண்டாக் கும் இனிய சொற்களைச் சொல்லுபவர்களுக்குத் துன்பத் தினை மிகுவிக்கும் வறுமை என்பது இல்லை.

5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணி அல்ல மற்றுப் பிற.

(ப-ரை ஒருவற்கு - ஒருவனுக்கு, அணி - அணிகலன் என்பது, பணிவுடையன் . தக்கவர்களிடத்தில் பணிதல் காட்டி, இன்சொலனாதல் யாவரிடமும் இனிய சொற். களைப் பேசுபவனாக இருத்தல், பிற அல்ல - இவையன்றி பிற அணிகலன்கள், அணிகலன்கள் அல்லவாம்.

(கரை) பணிந்து நடத்தலும், இன்சொல்லும் ஆகிய இரண்டும் ஒருவருக்கு அணிகலன்களாகும். மற்றவை: அணிகலன்கள் ஆகா.

6. அல்லவை தேய அறம்பெருகும் கல்லவை

நாடி இனிய சொலின்,

(ப-ரை நல்லவை . நன்மை உண்டாக்கும் இனிய சொற்களை, நாடி - ஆராய்ந்தறிந்து, இனிய சொலின் - இனிமையானவைகளையே பேசுவானானால், (அவனுக்கு i அல்லவை - தீமைகள், தேய - குறைந்து தேய்ந்து, அறம் பெருகும் . அறமானது மிகுந்து வளரும்.

(கரை) பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை ஆராய்ந்தறிந்து இனிமையானவற்றைச் சொல்லுவானா னிால், அவனுக்குத் தீமைகள் தேய்ந்து அறம் மிகுந்து: வளரும். -