பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

7. நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல், (ப-ரை) பயன் ஈன்று - நற்பயனைக் கொடுத்து, பண்பின் - இனிமையான நற்பண்பிலிருந்து, தலைப் பிரியா - விலகாத, சொல் . இனிய சொற்கள், நயன் .

நீதியினையும், ஈன்று - கொடுத்து, நன்றி . அறமானதை யும், பயக்கும் - கொடுக்கும்.

(கரை) நற்பயனைக் கொடுத்து இனிமையான நற். பண்பிலிருந்து நீங்காத இன் சொற்கள் நீதியினையும் அறத் தினையும் கொடுக்கும்.

8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

(ப-ரை) சிறுமையுள் - துன்பம், நீங்கிய செய்யாத, இன் - இனிய, சொல் - சொற்கள், மறுமை - மறுமையிலும், இம்மை . இம்மையிலும், இன்பம் தரும் - இன்பத்தினைத் தருவதாகும்.

(கரை) பிறர்க்குத் துன்பம் செய்யாத இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் இன்பத்தினைக் கொடுப்ப தாகும்.

9, இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.

(ப-ரை) இன்சொல் - இனிமையான சொற்கள், இனிது. இன்பத்தினை, ஈன்றல் - பயப்பதனை, காண்பான் - கண்டறிந்தவன், வன் - கடுமையான, சொல் - சொற்களை, வழங்குவது - பேசுவது, எவன் . ஏனோ? என்ன நினைத்தோ?

(கரை) பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பத். தினைத் தரும் என்பதைக் கண்ட ஒருவன், பிறரிடம் கடுஞ். சொற்களைச் சொல்லுவது என்ன பயன் கருதி? +