பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

10. இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய்வர்க் தற்று.

(ப-ரை) இனிய - இனிமையான சொற்கள், உளவாக தன்னிடம் இருக்கும் போது, இன்னாத - துன்பமானவை களை, கூறல் கூறுதல், கனி இருப்ப பழங்கள் தன்னிடம் இருக்கும் போது, காய் - காய்களை, கவர்ந்தற்று - உண்பது போன்றதாகும்.

(கரை) அறம் பயக்கும் இனிமையான சொற்களும் தன்னிடத்தே இருக்க, அவற்றைக் கூறாமல் கடுஞ்சொற் களைச் சொல்லுதல், கனிகள் தன்னிடம் இருக்கும்போது காய்களைத் தின்பது போன்ற தனை ஒக்கும்.

11. செய்ங்கன்றியறிதல்

(தனக்குப் பிறர் செய்த நன்மையினை மறவாதிருத்தல்)

1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

(ப-ரை) செய்யாமல் - தனக்கு முன்பு ஒர் உதவியும் செய்யாதிருந்த நிலையில், செய்த உதவிக்கு - மற்றவனுக் குச் செய்த உதவிக்கு, வையகமும் . இவ்வுலகத்தினையும், வானகமும் - வானுலகத்தினையும், ஆற்றல் - கைம் மாறாகக் கொடுத்தாலும், அரிது . அந்த உதவிக்கு இணை

யாவது முடியாததாகும்.

|க-ரை) தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறருக்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் சடாகாது. : -