பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தெரிவார் . அக்கருத்தின் பயனை அறிந்து தெரிந்தவர்கள், (தினை, பனை என்பவை அளவைகள்1

(கரை) தினையளவினதாகிய நன்மையினைச் செம்' தாலும் அதனைப் பனையளவினதாகக் கொள்ளுவார்கள். யாரென்றால், அக்கருத்தின் பயனையறிந்தவர்கள் என்பதாம்.

5. உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

(ப-ரை) உதவி - செய்யப்படும் உதவி என்பது, உதவி வரைத்து . அவ்வுதவியின் அளவினைப் பொருத்தது. அன்று - அல்ல, உதவி . அவ்வுதவியானது, செயப்பட்டார்செய்யப் பெற்றுக் கொண்ட ஒருவரது, சால் பின் - சால்பு என்னும் நற்குணத்தின் தகுதியான, வரைத்து - அளவினையே பொருத்ததாகும்.

(கரை) உதவிக்கு அளவு என்பது இல்லை. அவ்வுதவி யினைப் பெற்றுக் கொண்டவரது நற்குணத் தகுதியின் அளவினைப் பொறுத்ததே அவ்வுதவியின் அளவுமாகும்.

6. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்புஆயார் கட்பு.

(பரை) துன்பத்துள். துன்பம் வந்த காலத்தில், துப்பாயார் - உதவியாய் இருந்தவரது, நட்பு - நட்பினை. துறவற்க . எப்போதும் விடாமல் போற்ற வேண்டும், மாசு - மனத்தில் குற்றம், அற்றார் - இல்லாதவரது, கேண்மை - நட்பினை, மறவற்க . எப்போதும் மறக்கக் கூடாது.

(க-ரை) துன்பம் வந்த காலத்தில் துணையாக இருந்தவர் நட்பினை விடாதிருத்தல் வேண்டும். மனத்தில் குற்றமில்லாதவர்களின் உறவுபோன்ற நட்பினை மற. வர்திருத்தல் வேண்டும்.