பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.

(ப-ரை தம்கன் - தமக்கு ஏற்பட்ட, விழுமம் - துன்பத்தினை, துடைத்தவர் போக்கித் துடைத்த வருடைய, நட்பு - சிறப்பான நட்பினை, எழுமை . எழுகின்ற தன்மையான, எழுபிறப்பும் பல பிறவிகளிலும், உள்ளுவர் . பெரியோர்கள் மனத்தில் எண்ணிக் கொன் டிருப்பார்கள்.

(க-ரை) தமக்கு உண்டாகிய துன்பத்தினைப் போக்கிய வருடைய நட்பினை எழுமையினையுடைய எழுபிறப்பிலும் பேரியோர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்

8. கன்றி மறப்பது கன்றன்று கன்றல்லது

அன்றே மறப்பது கன்று.

(ப-ரை நன்றி - ஒருவன் தனக்குச் செய்த நன்மை யானவற்றை, மறப்பது - மறப்பது, நன்று - நல்லது, அன்று - அல்ல, நன்றல்லது . நன்மையல்லாத தீங்கினை, அன்றே அப்போதே, மறப்பது நன்று - மறந்து விடுதல் நல்லதாகும்.

(கரை) பிறர் செய்த நன்மையினை மறப்பது ஒருவற்கு நல்லதல்ல; அவர் செய்த தீமையினை அப்பொழுதே மறந்து விடுதல் நல்லதாகும்.

9. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுகன்று உள்ளக் கெடும்.

|ப-ரை) கொன்று - கொல்லுதல், அன்ன போன்ற, இன்னா - துன்பத்தினை, செயினும் - ஒருவர் நமக்குச் செய்தார் என்றாலும், அவர் - அவர், செய்த . முன்பு தமக்குச் செய்த, நன்று . நன்மை, ஒன்று ஒன்றினை, உள்ள மனத்தில் நினைத்துப் பார்த்தால், கெடும் . இப்போது அவர் செய்த தீமை கெட்டு மறையும்.