பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

தாகும், அடங்காமை அடக்கமில்லாத தீயகுணம், ஆர் - பொறுத்தற்கரிய, இருள் - இருளான துன்ப உலகில், உய்த்துவிடும் கொண்டு தள்ளிவிடும்.

(க-ரை அடக்கமாகிய அறம் ஒருவனை அமரர்கள் உலகில் கொண்டு செலுத்தும். அடக்கமில்லாத தீயகுணம் பொறுத்தற்கரிய (இருண்ட) துன்ப உலகில் செலுத்தும்,

2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு

|பரை அடக்கத்தை - அடக்கம் எ ன் ப த ைன, பொருளாக் காக்க - சிறந்த பொருளாகக் கொண்டு காத்தல் வேண்டும், உயிர்க்கு - மக்களுடைய உயிர்க்கு, அதனின் - அவ்வடக்கத்தைவிட, ஊங்கு . சிறந்த, ஆக்கம் - செல்வப் பெருக்கமானது, இல்லை . பிறிது பாதும் இல்லை கயாகும்.

(க-ரை அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்தல் வேண்டும். ஏனெனில், மக்களுயிர்க்குச் செல்வப் பெருக்கமானது அதனைவிடப் பிறிது யாதும் இல்லை.

3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

(ப-ரை அறிவு அடங்குதல் அறிவுடைமை யென்று, அறிந்து - தெரிந்துகொண்டு, ஆற்றின் . நன்மையான வழி யில், அடங்கப் பெறின் - அடங்கி இருப்பானேயானால், செறிவு - அந்த அடக்கமானது, அறிந்து - நல்லோரால் தெரிந்துணரப்பட்டு, சீர்மை ப ய க்கு ம் - பெருஞ் சிறப்பினைக் கொடுக்கும்.

(க-ரை அடங்குதல் தமக்கு அறிவான செயல் என்று அறிந்து கொண்டு நன்மையான வழியில் அடங்கி இருப் வானேயானால் அந்த அடக்கமானது நல்லோரால் அறிந்