பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

துணரப்பட்டு அ வ னு க் கு ப் பெருஞ் சிறப்பினைக் கொடுக்கும்.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

(ப-ரை) நிலையில் - இல்லற நெறிகளில், திரியாமல் . உறுதியாக மாறுபடாமல் இருந்து, அடங்கியான் - அடக்கத் துடன் வாழ்பவனுடைய, தோற்றம் . சிறந்த தோற்ற மானது, மலையினும் - மலை உயர்ச்சியினை விட, மாண . மிகவும், பெரிது - பெரியதாகக் கருதப்படும்.

(க-ரை) தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியான த மலையின் உயர்ச்சி: யினைவிட மிகவும் பெரியதாகும்.

5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

(ப-ரை பணிதல்- அடக்கத்துடன் பணிந்து வாழ்தல், எல்லார்க்கும் . எல்லோருக்கும், நன்றாம் - நல்லதாகும், (இருந்தாலும்) அவருள்ளும் - அவர்களுக்குள்ளும், செல் வர்க்கே - செல்வம் படைத்தவர்களுக்கு, :(பணிதல் இருந்து விட்டால்) செல்வம் - வேறொரு செல்வமும், தகைத்து . உண்டான தன்மை யாகும்.

|க-ரை) பணிந்து அடங்கி வாழ்தல் எல்லோருக்கும். நல்லதாகும். அவர்களுக்குள்ளும் செல்வர்களுக்குப் பணிவு. இருந்து விட்டால், வேறொரு செல்வம் சேர்ந்தது போன்ற சிறப்பினையுடையதாகும்.

6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து.

ப-ரை ஆமைபோல் - ஆ ைம யி ைன ப் போல, ஒருமையுள் . ஒரு பிறப்பில், ஐந்து - மெய், வாய், கண்,