பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும், அடக்கல் . அடக்கி வாழும், ஆற்றின் - வல்லமை பெற்றிருந்தால், எழுமையும் - எழுகின்ற பிறப்புக்களிலும், ஏமாப்பு - பாது காப்பாக இருத்தலை, உடைத்து பெற்றிருப்பதாகும்.

(கரை) ஒரு பிறப்பில் ஆமையினைப் போல மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி வாழும் வல்லமை பெற்றிருந்தால் அவ்வல்லமை எழுகின்ற பிறவிகளில் பாதுகாப்பு உடையதாகும்.

7. யாகாவார் ஆயினும் காகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

(ப-ரை) யா - எதனையும், காவார் . காக்க மாட்டார், ஆயினும் - ஆனாலும், நா - நாவொன்றினை மட்டும், காக்க காப்பாற்றிக் கொள்ளுதல் வேண்டும், காவாக் கால் - அவ்வாறு காப்பாற்றாவிட்டால், சொல் - சொல் லும் சொல்லில், இழுக்குப்பட்டு - குற்றம் ஏற்பட்டு, சோகாப்பர் வருந்துவர். ;

(க-ரை) காக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் காப்பாற்றாவிட்டாலும் நாவொன்றினை மட்டுமாவது காப்பாற்றுதல் வேண்டும். அவ்வாறு காக்காவிட்டால் சொற்குற்றத்திலே அகப்பட்டுத் தாமே துன்புறுவர்.

8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகாது ஆகி விடும்.

(ப-ரை) தீ - கொடிய, சொல் - சொற்களினுடைய, பொருட்பயன் - தன்மைகளால் வ ரு கி ன் ற துன்பம், ஒன்றானும் - ஒன்றுதான், என்றாலும் (அது) உண்டாயின்ஒருவனிடத்தில் உண்டாகி விட்டால், நன்று . அவனுக்கு மற்ற நன்மைகளினால் ஏற்பட்ட பயனும், ஆகாது ஆகி விடும் - தீமையானது ஆகிவிடும். .