பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

(கரை) தீய சொற்களினுடைய தன்மைகளால் பிறருக்கு வருகின்ற துன்பம் ஒன்றேனும் ஒருவனிடத்தில் உண்டாகிவிட்டால் அவனுக்குப் பிற நன்மைகளினால் உண்டான பயனும் தீயதாய் ஆகிவிடும்.

9. தீயினால் சுட்டபுண் உள்.ஆறும் ஆறாதே

காவினால் சுட்ட வடு.

(ப-ரை தீயினால் - தீ யி ன ல், சுட்ட - சுடப்பட்டு உண்டான, புண் - புண்ணானது, உள் - (உடம்பில் இருப்ப தனாலும்) மனதில், ஆறும் - ஆறிவிடும், நாவினால் சுட்ட - நாவினாலே (சொல்லால்) சுடப்பட்ட, வடு ஆங்ாது . வடுவானது ஆறாமல் எப்போதும் இருக்கும்.

(கரை) ஒருவன் ஒருவனை நெருப்பினால் சுட்டு அதனால் உண்டான புண் உடம்பில் காணப்பட்டாலும் மனத்தில் ஆறிவிடும். நாவினால் சுட்ட வடுவானது. ஆறாது எப்போதும் இருக்கும்.

10. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

(ப-ரை கதம். வெகுளியினை கோபத்தினை), காத்து. அடக்கிக் காத்து, கற்று அடங்கல் . கல்வி பெற்று அடக்கம் கொண்டு, ஆற்றுவான் . ஆற்றல் உள்ளவனாக இருப்பவ லுடைய, செவ்வி - காலத்தினை, அறம் அறமானது, துழைந்து ஆற்றும் . அவனிடம் சென்றடையும் வழியை, பார்க்கும் - ஆராய்ந்து பார்த்திருக்கும்.

(கரை) கோபத்தினை அடக்கித் காத்துக் கல்வி பெற்றவனாகி அடங்கி இருப்பதில் ஆற்றல் உள்ளவனாக இருப்பவனது காலத்தினை, அறமானது அவனை அடையும் வழியிலே புகுந்து, பார்த்து இருக்கும்.