பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

போன்று முதற்காரணமாகும், தீ - தீய ஒழுக்கம் . ஒழுக்க மானது, என்றும் இடும்பை தரும் - எப்போதும் துன்பத், தினைக் கொடுக்கும்.

(க-ரை) நல்லொழுக்கம் எ ன் ப து நன்மையான அறத்திற்கு விதைபோன்ற காரணமாகும். தீய ஒழுக்க மானது எப்போதும் துன்பத்தினைத் தருவதாகும்.

9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்.

(ப-ரை) வழுக்கியும் மறந்தேனுங்கூட, தீய தீமை, தரும் சொற்களை, வாயால் - தமது வாயினால், சொல்ல. சொல்லுதல் என்பது, ஒழுக்கம் - நல்லொழுக்கம், உடைய. வரிக்கு - உள்ள பெரியவர்களுக்கு, ஒல்லாவே - முடியாத ஒன்றாகும். .

(க.ரை நல்லொழுக்கமுள்ள பெரிய வர் க ளு க்கு மறந்துங்கூட தீமை தரும் சொற்களைச் சொல்லுல தென்பது முடியாததாகும்.

10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

|ப-ரை உலகத்தோடு . உலகமக்களோடு, ஒட்ட ஒன்றுபட்டு, ஒழுகல் - நடந்து கொள்ள வேண்டியதை. கல்லார் - கற்றுக் கொள்ளாதவர்கள், பல கற்றும் பல

நூல்களைக் கற்றிருந்தாலும், அறிவு அறிவு, இலாதார் . இல்லாதவர்களே யாவார்கள்.

(கரை) உலக மக்களோடு பொருந்துமாறு நடந்து கொள்ள வேண்டியதைக் கல்லாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவர்களே யாவார்கள்.