பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. பிறன் இல் விழையாமை

(ஒழுக்கங்கெட்டு பிறனுடைய இல்லாளை விரும்பாதிருத்தலாகும்).

1. பிறன்பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து

அறம்பொருள் கண்டார்கண் இல். (ப-ரை) பிறன் . மற்றவனுக்கு, பொருளாள் உரிமை யான வளை, பெட்டு ஒழுகும் . விரும்பி நடந்து கொள்ளு கின்ற பேதைமை அறிவிலித்தனம் என்பது, ஞாலத்து " உலகில், அறம்பொருள் - அறநெறியினையும் பொருள்: நெறியினையும், கண்டார்கண் இல் ஆராய்ந்து கண்ட, நல்லோரிடத்தில் இல்லையாகும்.

|க-ரை) பிறனுக்குப் பொருளாம் தன்மையுடைய இல்லாளைக் காதலித்து ஒழுகும் அறியாமைக் குணம் உலகில் அறம் பொருள் நூல்களை ஆராய்ந்து கண்டவ ரிடத்தில் இல்லையாகும்.

2. அறன்கடை கின்றாருள் எல்லாம் பிறன்கடை

கின்றாரின் பேதையார் இல்.

(ப-ரை) அறன் கடை - அறத்திலிருந்து நீங்கி, . நின்றாருள் - நின்றவர்கள், எல்லாம் . எல்லோரையும் விட, பிறன்கடை - பிறன்மனையாளை இச்சித்து அவள் வாயிலிலே, நின்றாரின் நின்றவர்களைப் போல, பேதை யார் இல் - அறிவற்றவர்கள் இலர்.

(க-ரை அறத்திற்குப் புறம்பான வழியில் நின்ற எல்லாருள்ளும் பிறனுக்குரிய இல்லாளை இச்சித்து அவனுடைய வாயிலில் சென்று நின்றவர்களைப் போலப் பேதையார் இல்லை.