பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரை நூற்றாண்டில்...

மூவேந்தர் முத்து.

'குறட்பயன் கொள்ள கம்திருக்

குறள் முனி சாமிசொல் கொள்வது போதுமே”

என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் புகழ் மொழிக்கேற்ப, தமிழ் மறைக் காவலர் கலைமாமணி திருக்குறளார் அவர்கள், தமிழ் மக்கள் பயன்படவேண்டும், பண்பட வேண்டும் என்று திருக்குறளைப் பட்டி தொட்டி, நாடு நகர் எங்கும் ஓயாமல் உரையாற்றிக் கொண்டு. வருகிறார்கள்.

பண்டிதர் மட்டுமே படித்து இன்புற்று மகிழ்ந்த குறளினிமையை, பாமரரும் அறிந்து இன்புற வேண்டும். என்று, சிந்திக்கவைக்கும் சிரிப்புக் கதைகளைச் சொல்லி, அதன் மூலம் திருக்குறளை மக்கள் மத்தியில் பரப்பி ஒர் எழுச்சியை உருவாக்கிக் கொண்டு உலா வருகிறார்கள்.

காலம் காலமாக ஒவ்வொரு மகான்கள் தோன்று கிறார்கள். அந்த மகான்களின் போதனைகளை மக்களிடம் பரப்ப அவர்வழி சார்ந்தவர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதே போல் தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனாரின் குறட்பாக்களை, அன்பால்