பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

எக்காலத்திலும், நிற்கும் . நிலைபெற்று நிற்கின்ற, பழி எய்தும் - பழியினை அடைந்தே தீருவான்.

(க-ரை) பிறகு நடப்பதை அறியாமல் எளிமையான தென்று நினைத்துப் பிறனுக்குரிய இல்லாளிடத்தில் நெறி கடந்து செல்லுகிறவன் எக்காலத்திலும் மறையாமல் நிலைத்து நற்கும் பழியினை அடைவான்.

6. பகைபாவம் அச்சம் பழி என நான்கும் - இகவாவாம் இல்இறப்பான் கண்.

(ப-ரை) இல் - மற்றவன் இல்லாளிடத்தில், இறப்பான் கண் - நெறிகடந்து செல்லுபவனிடத்தில், பகை - பகை, பாவம் - பாவம், அச்சம் - பயம், பழி பழி, என . என்ப தான, நான்கும் - இந்த நான்கும், இகவாவாம் - எப்போ தும் நீங்காமல் இருப்பனவாகும்.

(கரை) பகை, பாவம், அச்சம், பழி ஆகிய இந்த நான்கு குற்றங்களும் பிறன் மனைவியினிடத்தே நெறி கடந்து செல்லுபவனை விட்டு ஒரு காலும் நீங்காவாம்.

7, அறன்இயலான் இல்வாழ்வான் என்பான்பிறன் இயலாள்

பெண்மை கயவா தவன்.

|ப-ரை) அறன் இயலான் . அறமாகிய தன்மையில் நின்று, இல்வாழ்வான் - இல்லறத்தில் வாழ்கின்ற வன் என்பான் - என்பவன், (யாரென்றால்) பிறன் இயலாள் - பிறனுக்கு உரிமையான மனைவியின், பெண்மை - பெண் இன்பத்தினை, நயவாதவன் . ஆசைப்படாது இருப்பவன் ஆவான்.

(கரை) அறமாகிய தன்மையுடன் இல்லறத்தில் வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் பிறனுக்கு உரிமை பூண்டு அவனுடைய இயல்பில் இருப்பவளது பெண் தன்மை யினை விரும்பாதவனே ஆவான்.