பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

8. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.

(பரை) பிறன் . மற்றவனுடைய, மனை - மனை பாளை, நோக்காத - மனதில் நினைக்காத, பேர் . பெரிய, ஆண்மை . ஆண்மைக் குணமானது, சான்றோர்க்கு - நிறை குணமும் அறிவும் பெற்ற பெரியோர்களுக்கு, அறன் ஒன்றோ அறமும் ஆகும் அது மட்டுமன்றி), ஆன்ற . மேலான, ஒழுக்கு ஒழுக்கம் என்பதுமாகும்.

|க.ரை) பிறன் மனைவியை உள்ளத்தில் நினைக்காத பெரிய ஆண்தன்மை சான்றோர்களுக்கு அறமும் ஆகும்; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.

9. கலக்குரியார் யார் எனில் காமtர் வைப்பின் பிறற்குஉரியாள் தோள்தோயா தார்.

(ப.ரை) நாம நீர் . அச்சப்படுவதாயுள்ள கடலால் சூழப்பட்ட, வைப்பில் - இவ்வுலகில், நலக்கு உரியார் - நன்மை அடைவதற்கு உரியவர்கள், யார் - எவர், எனின் . என்று கேட்டால், பிறற்கு மற்ற ஒருவனுக்கு, உரியாள் , உரிய மனைவியினது, தோள் தோயாதார் - தோள்களை அணையாதவர்களே யாவர்.

(கரை) அச்சம் தருவதாகிய கடலால் சூழப்பட்ட இவ் அலகில் எல்லா நன்மைகளையும் அடைவதற்கு உரியவர்கள் யாரென்றால், பிறனுக்கு உரியவளது தோள்களை அணையாதவர்கள் என்பதாம்.

10. அறன்வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை கயவாமை கன்று.

|ப-ரை அறன் - அறநெறியினை, வரையான் . தான் விரும்பி மேற் கொள்ளாமல், அல்ல செயினும் . திமை களைச் செய்தாலும்கூட, பிறன் . பிறனுடைய, வரை