பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

செய்யார் . அறமல்லாத தீய செயல்கனைப் பெரியோர்கள் செய்ய மாட்டார்கள்.

(கரை) பொறாமையினால் தமக்குத் துன்பம் வருவதை அறிந்தவர்கள், பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது.

(ப-ரை ஒன்னார் . பகைவர்கள், வழுக்கியும் . தீமை செய்யாமல் நீங்கி இருந்தாலும், கேடு ஈன்பது . (பொறாமை) தீமையினைந் தருவதாகும், (ஆனபடியால்) அழுக்காறு - பொறாமையினை, உடையார்க்கு - உடைய வர்களுக்கு, அது - அப்பொறாமைக் குணமே, சாலும் . (துன்பம் தருதற்குப்] போதுமானதாகும்.

|க-ரை) அழுக்காறு (பொறாமை) உடையவர்களுக்குப் பகைவர்கள் தீமை செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், அப்பொறாமைக் குணமே அவர்களை அழிப்பதற்கும் போதுமானதாகும்.

6. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம்

உண்பது உம் இன்றிக் கெடும்.

(ப-ரை) கொடுப்பது - பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்து, அழுக்கறுப்பான் பொறாமைப்படுகிறவனுடைய, சுற்றம் - உறவினர் என்னும் சுற்றமானது, உடுப்பது உம் . உடுப்பதற்கு ஆடைகளும், உண்பது உம் - உண்பதற்கு உணவும், இன்றிக்கெடும் - இல்லாமல் கெட்டுவிடும்.

(க-ரை) பிறருக்குக் கொ டு ப் ப ைத ப் பார்த்துப் பொறாமைப் படுகிறவனுடைய சுற்றம் உடுப்பதும் உண்பதும் இல்லாமல் கெட்டுவிடும்.