பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

7. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

(ப-ரை அழுக்காறு வ பொறாமையென்பதனை, உடையானை கொண்டிருப்பவனை, செய்யவள் . திருமகள், அவ்வித்து . பொறாமைப்பட்டு, தவ்வையை . மூத்தவளை தமக்கையை காட்டிவிடும் . அவனிடம் போகச் செய்து விட்டுத் தான் விலகிவிடுவாள்.

|க-ரை பிறருடைய செல்வம் க ண் ட ேப ா து. பொறாமைப்படுகின்றவனைப் பார்த்துத் திருமகள் தானும் பொறாமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள்.

8. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

|ப-ரை அழுக்காறு - பொறாமை, என . என்னும், ஒரு பாவி . ஒரு பாவியானவன், திருச்செற்று . ஒருவனுடைய செல்வத்தையழித்து; இ. திய, வழி . இடத் திற்கு (உலகிற்கு உய்த்து விடும் - கொண்டு தள்ளி விடுவான்.

(கரை) பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி தன்னையுடையானுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய நிலைக்குள் தள்ளிவிடுவான்.

9. அவ்விய கெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் கினைக்கப் படும்.

(ப-ரை அவ்விய பொறாமையினைக் கொண்ட, நெஞ்சத்தான் - நெஞ்சினையுடையவனது, ஆக்கமும் . செல்வப்பெருக்கமும், செவ்வியான் - நல்ல உள்ளம் படைத் தவனது, கேடும் - கெடுதியென்னும் வறுமையும் இருக்கு மானால்1 நினைக்கப்படும் - அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளப்படும்.