பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு {34 அதிகாரம் 66 வினைத் துய்மை 65. துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே கொடுக்கும் செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பும் எல்லாவற்றையும் நல்கும். 852 புகழையும் அறத்தையும் தராத தூய்மையற்ற செயல் களை எக்காலத்திலும் ஒருவன்செய்யாமல் விட்டொழிக்க வேண்டும். 65. மேன்மேலும் உயர்வதற்கு எண்ணுவோர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்கவேண்டும். 854.கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள்தாம்துன்பத்திற்கு உட்பட நேர்ந்த காலத்திலும் இழிவான செயல்கள் எதனையுமே செய்யார். 655 பின்னர் நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்தல் கூடாது ஒருகால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நன்று. 656. தன்னைப் பயந்த அன்னையின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்டு வருந்த நேர்ந்தாலும் சான்றோர்கள் பழிப்பதற்குக் காரணமான இழிவான செயல்கள் ஒருவன் செய்தல் கூடாது. 65. பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வப் பெருக்கத்தைவிடச் சான்றோர் செயல் தூய்மை யோடிருந்து அடையும் பொல்லாத வறுமையே சிறந்தது. 658. ஆகாதவை எனச் சான்றோர்களால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்க்கும் அவை நிறைவேறினாலும் துன்பத்தையே தரும். 859 பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பெருள் எல்லாம் பெற்றவன் அழும்படியாகச் செய்து அகன்று விடும் நல்வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன் தரும். § வஞ்சனையான வழியில் பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது பச்சை மண்ணாலான கலத்தினுள் நீரைப் பெய்து அதனைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.