பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 252 அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல் 1231. இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் எம் கண்கள் தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நானுகின்றன. 1232 பசல்ை நிறத்தைப் பெற்று நீர் சொரியும் கண்கள் நம்மை முன்புவிரும்பிய காதலர் இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வனபோல் உள்ளனவே! 123. காதலரோடு கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள் இப்போது பிரிவினால் மெலிந்து அவருண்ட். பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பனபோல் உள்ளன். 234 தம் துன்னவர் விட்டு நீங்கியதால் அவரால் பெற்ற செயற்கை அழகும் பழைய அழகும் கெட்டு வாடியதோள்கள் தம் பருமன் குறைந்து பசிய வளையல்களையும் கழலச் செய்கின்றன. 1235 வளையல்களும் கழன்று விழ தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள் நம் துன்பத்தை உணராத கொடியவ்ரின் கொடுமையை ஊரறியப் பறை சாற்றுகின்றன. 1236. வளையல்கள் கழன்று வீழ்ந்து. தோள்கள் மெலிந் தமையால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியர் எனக் கூறக்கேட்டு யானும் வருந்துகின்றேன். 23. நெஞ்சமே கொடியவராகிவிட்ட காதலருக்கு மெலி வுற்ற என் தோன்களின் ஆரவாரத்தை எடுத்துக் கூறி உதவியைச் செய்ததனால் நீயும் பெருமை அடைவர்ய்ோ 238. தன்னை இறுகக் கட்டித் தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே சிறிதாகிய அப்பிரிவையும் பொறுக்க மாட்டாமல் பசிய வளையல்களனிந்த இப்பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்து விட்டதே 1239. கைகளைத் தளர்த்திய பொழுது ఆర్టి முயக்கத் திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய காதலியின் பெரிய குளிர்ந்த கண்களும் அழகிழந்து பசலை நிறம் அடைந்து விட்டன. 1240. காதலியின் ஒளியுள்ள நெற்றியின் நிறவேறுபாட்டைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந் துன்பம் அடைந்து விட்டது