பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 286 அதிகாரம் 31 புலவி 13.நாம் ஊடும்போது அவர் அடைகின்ற அல்லல்நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக அவர் வந்ததும் அவர்பாற் சென்று தழுவாமல் பிணங்குவாயாக. 1302. உணவுப் பண்டங்களில் அளவாக உப்பு சேர்ந்திருப்பது போன்றதே பிணங்குதல் பிணங்குதலை அளவு கடந்து சிறிது நீட்டித்தாலும் அந்த உப்பு சிறிது மிகுந்தது போலாகும். 133 தம்மோடு பிணங்கியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல் துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பம் செய்து வருத்தினாற் போன்றது. 130, ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய் யாமல் கைவிடுதல், முன்னரே நீரின்றி வாடியுள்ளி வள்ளிக் கொடி யின் வேரை அறுப்பது போன்றது. 1305. நல்ல பண்புகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவர்க்கு அழகாவது, மலர்போன்ற கண்களையுடைய மகளிரின் நெஞ்சில் உண்டாகும் பிணங்குதலின் சிறப்பேயாகும். - 1306. பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால் காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போலப் பயனற்றதாக அமைந்துவிடும். 15. ஊடியிருத்தலிலும் தருதலுர்க்கு ஒருவதைத் துன்பம் உள்ளது. கூடியிருக்கும் இன்பம் இனி மேல் நீட்டிக்காதோ? என்று நினைந்து ஏங்கி வருந்தும் அச்சமே அது. 1308. நம்மால் இவரும் வருந்தினார் என்று உணர்ந்து அந்த வருத்தத்தைத் தீர்க்கமுய்லும் காதலர் இல்லாதபோது வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்? ேே. நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது. அது போன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்து மட்டிலும் நிகழுமானால், இனிமையைத் தருவதாகும். 9ே. பிணக்கு கொண்டபோது அதனைத் தெளிவித்து மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடுவோம்' என்று நினைப்பது அது கொண்டுள்ள் ஆசையினலே ஆகும்.