பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 72 அதிகாரம் 36 மெய்யுணர்தல் 351. உண்மைப் பொருள் அல்லாதவற்றை உண்மைப் பொருள் களாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பல வகைப் பிறப்புகளும் உண்டாகின்றன. 352 மயக்கம் நீங்கிக் குற்றும் அற்ற மெய்யறிவுடையவர்கட்கு அவ்வுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும். 35. ஐயத்தினின்று நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு இவ்வையத்தினும் வானம் மிகவும் அண்மையானதும் உறுதி யானதும் ஆகும். - - - 35. மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐம்புலன்களின் வேறு பாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் யாதும் பயன் இல்லை. 355. எந்தப் பொருள் எத்தன்மை இயல்போடு தோன்றிய போதிலும் அத்தோற்றத்தை மட்டிலும் கண்டு மயங்காமல் அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு கும். 358. கற்கவேண்டியவற்றைக் கற்று. இங்கு மெய்ப் பொருளையும் உணர்ந்தவர், மீண்டும் இப்பிறப்பிற்கு வராத பெரு நெறியை அடைவர். - 35. என்றும் உளதான உண்மைப் பொருளை ஒருவனுடைய உள்ளம் ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ணவேண்டா, 358 பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்கும் பொருட்டு வீடுபேறு என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும். 359 எல்லாப் பொருள்கட்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக்கெடுமாறு ஒழுகினால் சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா. - 3). விருப்பு வெறுப்பு அறியாழை ஆகிய இக்குற்றங்கள் மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.