பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 76 — 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். . (கோ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத் துள் வைக்கப்படும். - (ப-ாை) வையத்துள்-உலகத்திலே, வாழ்வாங்கு-வாழ வேண்டிய ஒழுங்கு முறைப்படி, வாழ்பவன்-இல்வாழ்க்கை நடாத்துபவன் (அச்சிறப்பால்) வான் உறையும்-தேவ உல கத்தில் வாழ்கின்ற, தெய்வத்துள்-தேவருள் (ஒருவகை), வைக் கப்படும்-வைத்து (எண்ணி) மதிக்கப்படுவான். (தெ-ாை) ஒழுங்கான முறையில் இல்வாழ்க்கை செய்பவன் மனிதனேயாயினும், தெய்வம்போல எல்லோராலும் சிறப் பிக்கப்பெறுவான். இதற்கு எடுத்துக்காட்டுக்கள் பல உண் டன்ருே? வாழ்பவன்-எழுவாய்; வைக்கப்படும்-பயனிலை. (மண-உாை) இல்வாழ்க்கை வாழும்படியினலே வாழுமவன் உலகத் கிலே தேவருள் ஒருவகை மதிக்கப்படுவன். (பரி-உமை) இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினல் வையத்தின் கண் வாழ்பவன், வையத்தானே எனினும், வானின்கண் உறையும் தேவருள் ஒருவகை வைத்து நன்கு மகிக்கப்படும். அதிகாரச் சுருக்கம் இல்வாழ்வான், உலகில் வாழும் எல்லோர்க்கும் துணையா வான். அவன், பிறர் பழிப்பிற்கு இடமின்றி, நல்ல முறையில் வாழ்வானேயானல், அவன் குடும்பம் தொடர்ந்து வாழும். எல்லா நன்மைகளும் கிடைக்கும். ஆதலின், அவன் ஏனையோ ரைக் காட்டிலும் சிறந்தவன் ஆவான். அதுகுறித்து, எல்லோ ரும் அவனைத் தெய்வமாகப் போற்றுவார்கள். துறவறம் வேண்டாம் என்று சொல்லவில்லை வள்ளுவர். அதனே முற்றும் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள் மேற்கொள் ளலாம். அஃது அரிது. இல்லறமோ, எல்லோரும் எளிமையாக வும், இனிமையாகவும் கைக்கொள்ளக் கூடியதாகும். பலர்க்கும் உதவவும் முடியும்; ஆதலின் இல்லறம் சிறந்தது என்பதே இங்குக் கருத்து. (அடுத்த அதிகாாம்-வாழ்க்கைத் துணை நலம்.)