பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 115 51. ஒருவரை ஆராய்ந்து நம்புதல் அறம், பொருள், இன்பம், உயிர் போய்விடுமோ என்ற அச்சம் ஆகிய நான்கிலும் எங்ங்ணம் உளார் என ஆராய்ந்தே ஒருவரை நம்ப வேண்டும். - 501 நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றத்திலிருந்து விலகிப் பழிக்கு வருந்துகிற நாணம் உடையவனிடத்திலேயே நம்பிக்கை கொள்ள வேண்டும். 5 O2 அரிய நூற்களைப் படித்துக் குற்றம் அற்றிருப்பவரி டத்தும் அறியாமை இல்லா திருத்தல் இயலாது. 503 ஒருவருடைய குணங்களையும் ஆராய்ந்து, குற்றங்களை யும் ஆராய்ந்து அவ்விரண்டனுள் மிகுதியாயிருப்பவற்றை அறிந்து அம்மிக்கவற்றைக் கொண்டு நல்லவரா கெட்டவரா எனத் தெளிய வேண்டும். 5 O 4 யாரொருவரது பெருமையை அறிவதற்கும் மற்ற சிறுமையை அறிவதற்கும் அரவரவர் செய்யும் செயல்களே உரைகற்களாம். 5 O 5 சார்பு அற்றவரை நம்புவதை விழிப்பாய் இருந்து நீக்க வேண்டும்; அவர் ஒரு பிடிப்பும் இல்லாதவர்; ஆதலால் பழிக்கு நாண மாட்டார். 5 Ꮊ 6 அன்பின் பொருட்டாக அறிவற்றவரை நம்பியேற்றல், எல்லா மடமைகளையும் விளைவிக்கும். 5O7 பிறனொருவனை ஆராயாது நம்பினால் நம்பியவனு டைய வழித்தோன்றுவோர்க்கும் நீங்காத துன்பங்கள் நேரும். 5 O 8 எவரையும் ஆராயாது நம்பற்க ஆராய்ந்த பின்னரே, அவரிடம் தெளிவு பெற வேண்டிய கருத்துக்களை அறிந்து தெளிவுறுக. 509 ஆராயாதவனை நம்புதலும், ஆராய்ந்து நம்பியவன் மேல் பிறகு ஐயம் கொள்ளுதலும் நீங்காத துன்பங்களை விளைக்கும். 5 10