பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரசியல் 121 54. சோர்ந்து மறதி கொள்ளாமை மிக்க மகிழ்ச்சிக் களிப்பினால் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மறந்து சோர்ந்து விடுதல், அளவு கடந்த சினத்தை விடத் தீயதாம். 531 அறிவை நித்தம் நிலைத்த வறுமை அழிப்பதுபோல, புகழை மறதி அழித்து விடும். 532 மறதிச் சோர்வு உடையவர்க்குப் புகழ்ப்பேறு இல்லை; அக்கொள்கை, உலகத்தே எவ்வகை நூலாசிரியர்க்கும் ஒத்த முடிபாகும். 53.3 அஞ்சி நடுங்குபவர்க்கு அரண்கள் இருந்தும் பயனில்லை; அதுபோல, எவையிருந்தும் மறதி உடையவர்க்கு நன்மையில்லை. 53.4 . துன்பம் உறுவதற்குமுன் தடுத்துக் காவாது சோர்ந்து தவறியவன், பின் உற்ற போது தன் தவறை எண்ணி இரங்கி வருந்துவான். 535 எவர் தொடர்பாகவும் எப்போதும் எதையும் மறவாது செயலாற்றும் திறன் தவறாது வாய்க்கப் பெற்றால் அதற்கு நிகரான நன்மை வேறு இல்லை. 536 மறந்து சோராமல் தக்க துணைக்கருவியுடன் விழிப்பாய்ச் செயலாற்றினால் செய்ய முடியாதவை எனக் கைகூடாத செயல்கள் எவையும் இல்லை. 537 புகழ்ச்சிக்குரிய செயல்களை மறவாது மதித்துச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாது இகழ்ந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறவிகளிலும் ஆக்கம் இல்லை. 53.8 தாங்கள் தமது களிப்பினால் இறுமாந்திருக்கும் போது, செய்ய வேண்டியதை மறதியால் செய்யாது புறக்கணித்த தால் அழிந்து போனவரை நினைத்துப் பார்க்க வேண்டும். - 539 அடைய எண்ணியதை உறுதியாக எண்ணிச் செயலாற் றின், எண்ணிய அதனை அடைதல் மிகவும் எளிது. 540