பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 135 61. சோம்பல் இல்லாமை குடி (குடும்பம்) என்னும் அணையா விளக்கு, சோம்பல் என்னும் சிட்டங் கட்டக் கட்ட ஒளி மழுங்கி அழியும். 601 தமது குடியை உயர்ந்த குடியாக்க விரும்புபவர், சோம்பலுக்குச் சோம்பல் தந்து சுறுசுறுப்புடன் இயங்கு வாராக. 602 மடியை (சோம்பலை) மடியிலே கட்டிக் கொண்டிருக்கும் அறிவிலி பிறந்த குடி அவனுக்கும் முந்தி மடிந்து போகும். 603 சோம்பலால் கெட்டு, சிறந்த முயற்சியை விட்டவர்க்குக் குடி அழிந்து குற்றமும் மிகும். 604 காலம் தாழ்த்தல், மறதி, சோம்பல், மிகுந்ததுக்கம் ஆகிய நான்கும் அழியும் இயல்பினர் காமுற்று அணியும் அணிகலன்களாம். 605 நாடாளும் வேந்தரவு ஆதரவு கிடைத்திருந்தாலும் சோம்பல் உடையவர் பெரும் பயன் பெறுதல் இயலாது. 606 சோம்பல் கொண்டு சிறந்த முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் இடித்துப் பேசி இகழும் சொற்களைக் கேட்பவர் ஆவார். 6O7 சோம்பல் குடிவாழ்க்கையில் தென்பட்டால், அது தன் பகைவர்க்குத் தன்னை அடிமையாக்கி விடும். 608 ஒருவன் சோம்பல் கொள்ளுதலை நீக்கி விடின், அவனது குடிவாழ்க்கைக்கு நேர்ந்த தீங்கு அழிந்து விடும். 609 அடியால் அளந்த இறைவன் தாவிய உலகப் பகுதி முழுவதையும் சோம்பல் இல்லாத வேந்தன் ஒருசேரப் பெறுவான். 61 O