பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 149 68. செயல் செய்யும் முறை ஆராய்ச்சியின் முடிந்த முடிபு ஒரு துணிவுக்கு வருதல்தான்; அவ்வாறு துணிந்த செயலைக் காலத்தாழ்ச்சியில் கிடத்தி வைப்பது தீமை தரும். 671 பொறுத்துச் செய்யக் கூடிய செயல்களைப் பொறுமையில் செய்க, பொறுத்துத் தூங்காமல் விரைந்து முடிக்க வேண்டிய செயல்களை விரைவிற் செய்க. 672 முடியும் போதெல்லாம் செயல் புரிதல் நல்லது ஒரு செயல் | நேரம் முடியாததாயின் வாய்ப்பு நேரும் நேரம் பார்த்துச் செய்து முடிக்க. 673 எடுத்துக் கொண்ட செயல், வெல்ல முயன்ற பகை ஆகிய இரண்டையும் குறையாக விட்டு வைப்பது, எண்ணிப் பார்த்தால், முற்றும் அணைக்காமல் குறையாக விட்ட தீயைப் போல் பின் மூண்டு அழிக்கும். 674 செயலுக்கு வேண்டிய பொருள், கருவி, காலம், செய்ம்முறை, இடம் ஆகிய ஐந்தையும் மயக்கம் அற ஆராய்ந்து செயல் செய்க. 675 செயல் முடிக்கும் வழியும், இடையில் வரக் கூடிய தடையும், செயல் முடித்தபின் பெறக் கூடிய பெரும் பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செயல் செய்க. 676 செயல் செய்பவன் செய்ய வேண்டிய முறையாவது, அச் செயலின் உள் நுணுக்கங்களைப் பட்டறிவால் தெரிந்திருப்பவனது கருத்தை ஏற்று நடத்தலாகும். 677 ஒரு செயல் புரியுங்கால் அதைக் கொண்டு இன்னொரு செயலை முடித்துக் கொள்ளுதல், மதத்தால் நனைந்த கன்னத்தை உட்ைய ஒரு யானையைக் காட்டி மற்றொரு -யானையைப் பிடிப்பது போன்றதாம். 678 நண்பர்க்கு நல்லவை செய்வதனினும், தம்மோடு பொருந்தாதவர்ைப் பொருத்தி நட்பாக்கிக் கோடல் விரைந்து செய்யப்பட வேண்டும். 6.79 உறையும் நாடு சிறியவராயிருப்பவர் தம் மக்கள் உள் நடுங்குவதற்கு அஞ்சி, குறை ಫಿನ್ಲಿ, தம்மினும் பெரியவரைப் பணிந்து உதவி பெறுவர். 680