பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாயிரம் 17 3. துறவியர் சிறப்பு ஒழுக்க நெறிநின்று உலகப் பற்றைத் துறந்தவர்களின் பெருமையை மிக மிக மேலாக மதிப்பது உயர் நூற்களின் 21 . سامها (لا) துறவியரின் பெருமைக்கு அளவு கூறவேண்டின், உலகில் இதுவரை பிறந்து இறந்து போனவரின் தொகையை எண்ணிக் கூறுவது போன்றது அது. 22 இம்மை மறுமை என்னும் இரண்டு நிலைகளையும் ஆராய்ந்து இம்மையில் அறநெறி நிற்கும் துறவியரின் பெருமை உலகில் மிகச் சிறந்தது. 23 அறிவுப் படையால் ஐம்பொறியாங் களிற்றை அடக்கிக் காப்பவன், மேலானதாகிய வீடாகிய (முத்தி) நிலத்திற்கு ஒரு விதை போன்றவன். 24 ஐம்புலன்களை அடக்கிய துறவியின் வலிமைக்கு (துறவியரால் ஒடுக்கப்பட்ட) அகன்ற விண்ணரசனாம் இந்திரனே போதுமான சான்று. - 25 செய்தற்கரிய உயர் செயல்கள் செய்பவரே பெரியர் அத்தகு செயல்கள் செய்யவியலாதார் சிறியர். 26 உலகம், சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐந்தின் திறத்தினை ஆராய்ந்தறிந்த மேலோனிடத்திலேயே அடங்கிக் கிடக்கும். 27 நிறை மொழியே கூறும் துறவியரின் சிறப்பை, உலகில் அவர்கள் அருளியுள்ள மறைமொழிகளே மெய்ப்பித்து விடும். - 28 நற்பண்பு என்னும் மலைமேல் வைகும் துறவியர்க்குச் சினம் கணப் பொழுது தோன்றினாலும், அதைத் தடுத்துக் காத்தல் அரிது. 29 அறம் பேணும் துறவியர் எவ்வுயிரிடத்தும் குளிர்ந்த அருளே கொண்டொழுகலால் அவர்களே அந்தணர் எனப்படுபவர். 3 O