பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குடியியல் 229 108. கீழ்மைத் தன்மை கீழ்மக்கள் பார்ப்பதற்கு மற்ற மாந்தர் போலவே இருப்பர் மாந்தரை அவர்கள் ஒத்திருப்பது போன்ற வேறு ஒப்புமை யாம் கண்டதில்லை. 1071 நல்லது இதுவென அறிந்தவரினும் அஃதறியாத கயவரே நல்வாய்ப்பு உடையவர்; ஏனெனில், கயவர் எது குறித்தும் கவலைப்படுவதில்லை. 1072 கீழ்மக்களும் தாம் விரும்புகின்றவற்றை யெல்லாம் செய்து நடப்பதால் இவ்வகையில் உரிமை யுடைய தேவரை ஒப்பர். 1073 கீழோர் அறிவற்ற மட்டிகளைக் கண்டால், அவரிலும் மட்டித்தனத்தில் மேம்பட்டவராகத் தம்மைக் காட்டி இறுமாப்புறுவர். 1 O 74 கீழ்மக்களது ஒருவகை ஒழுக்கத்திற்குக் காரணம் அச்சமே, மீதி ஒழுக்கம். ஏதேனும் ஆசை ஏற்படின் அது. நிறைவேறச் சிறிது நேரம் இருக்கும். 1 O75 தாம் கேட்ட மறைபொருளைப் பிறரிடம் கொண்டு போய் வெளிப்படுத்துவதால், செய்தி அறிவித்து அடிக்கும் பறைமேளம் போன்றவர் கயவர். , 1076 அடித்துக் கன்னத்தை உடைக்கும் மடக்கிய கையை உடைய கொடியவர் அல்லாதவர்க்குமுன், கயவர் தம் ஈரக் கையையும் உதறமாட்டார். 1077 குறையைச் சொல்லிய அளவிலேயே பெரியோர் பயன் அளிப்பர்; கீழோரோ, கரும்பைப் போல் முறுக்கிப் பிழிந்தால்தான் பயன்படுவர். 1 O78 பிறர் நன்கு உடுப்பதையும் உண்பதையும் கண்டால், பொறாமையால் அவர்மேல் குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்குவர் கீழோர். 1 O 79 கயவர் எதற்கு அருகர் என்றால், ஓர் இடையூறு நேர்ந்தால், விரைந்து தம்மை அடிமையாக விற்று விடுவதற்கு அருகர் ஆவர். 1080