இல்லறவியல் 33 11. ஒருவர் செய்த உதவியை மறவாது உணர்தல் தாம் ஓர் உதவியும் செய்யாதிருக்கவும் தமக்குப் பிறர் செய்த உதவிக்குப் பதில் உதவியாக, மண்ணுலகையும் விண்ணுலகையும் கூட ஈடுகட்ட முடியாது. 101 நெருக்கடியான காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவால் சிறியதாயினும், பயனால் அது உலகினும் மிகப் பெரியதாம். 1 O2 கைம்மாறு கருதாதவராய் ஒருவர் செய்த உதவியின் இனிமையை ஆராயின், அதன் நன்மை கடலினும் மிகப் பெரிதாம். 1 O 3 ஒருவர் தினையளவு சிறிய உதவி செய்தாலும், அதன் அரிய பயனை ஆராய்ந்தறிந்தவர்கள், அதனைப் பனையளவு பெரிய உதவியாகக் கொண்டு மதிப்பர். 104 உதவியின் அருமை, எவ்வளவு உதவி செய்தாரென்று உதவியின் அளவைப் பொறுத்ததன்று உதவியைப் பெற்றுக் கொண்டவரின் பெருந்தன்மையின் அளவைப் பொறுத்ததே. 1 O 5 குற்றமற்ற துயோரின் உறவை மறக்கவே கூடாது; துன்ப காலத்தில் ஆதரவளித்தவரின் தொடர்பை விடவே கூடாது. 1 O 6 தமக்குற்ற துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏறேழு பிறவியிலும் மறவாது நினைப்பர் நல்லோர். 1 O 7 ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லதாகாது; அவர் செய்த தீமையையோ செய்த அந்நேரமே மறந்து விடுவது நல்லது. - 1 O 8 ஒருவர் கொன்றது போன்ற கொடுந்துன்பம் செய்தாலும், அவரே முன்பு செய்த ஒரு நன்மையை இப்போது நினைத்தால் கொடுந்துன்பம் மறையும். 1 O 9 எந்த அறத்தை ஒழித்தவருக்கும் உய்யும் (தப்பும்) வழி இருக்கக் கூடும். ஒருவர் அளித்த உதவியை மறந்து கெடுத்தவனுக்கு மட்டும் உய்யும் வழி இல்லவே இல்லை. 1 1 Ο
பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/35
Appearance