பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 அறம் 17. அழுக்காறாமை ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. 161 விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் 162 அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். 163 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. 164 அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. 165 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும். 166 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். - 167 அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். 168 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். 169 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 17Ο