பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 49 19. புறம் பேசாதிருத்தல் ஒருவன் அறம் பேசானாய் அறம் அல்லாத தீமைகளைச் செய்தாலும், பிறரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்ற பெயரெடுத்தல் நல்லது. - 181 அறத்தை ஒழித்துத் தீமைகள் புரிவதை விட ஒருவரைப் பின்னாலே இழித்துப் பேசி நேரிலே பொய்யாகச் சிரித்து நடிப்பது கொடிது. 182 புறத்திலே பழித்துப் பேசி நேரிலே பொய்யாகப் புகழ்ந்து நடித்து உயிர் வாழ்தலை விட இறந்தொழிதல் அறநூல் கூறுகின்ற ஆக்கத்தைக் கொடுக்கும். 183 கண்ணெதிரில் நின்று கண்ணிரக்கம் இன்றிக் கடுஞ்சொல் சொல்லினும், முன்னால் இல்லாமல் பின்னால் விளைவதறியாத சொல் மட்டும் சொல்லலாகாது. 184 ஒருவன் அறம் பேசும் உள்ளத்தான் அல்லன் என்பது அவன் புறம் பேசும் சிறுமைத் தன்மையால் அறிந்து கொள்ளப் படும். 185 வேறொருவனைப் புறங் கூறிப் பழிப்பவன், தன் பழிகளுக்குள்ளும் கொடுந்தன்மை உடையவை அறியப்பட்டுப் பிறரால் பழிக்கப்படுவான். 186 மகிழப் பேசி நட்பு வளர்த்தலை அறியாதவர், விலகும்படிப் புறந்துற்றி நண்பரைப் பிரித்து விடுவர். 187 நெருங்கிப் பழகுபவரின் குற்றத்தையும் புறத்தே தூற்றிப் பேசும் தன்மையுடையவர், அயலார் செய்தியில் யாது செய்வரோ? 18.8 இல்லாத இடம் பார்த்து இழிமொழி பேசுபவனது உடல் சுமையை, இஃதும் ஓர் அறம் என்றெண்ணி உலகம் சுமக்கிறது போலும்! 1. 89 அயலார் பிழையை ஆய்வது போல தமது பிழையையும் ஆராய்ந்து பார்த்தால், பின்னர் நிலை பெற்ற உயிர்க்குத் தீமையென ஒன்றுளதோ? 190