பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 53 21. தீமை செய்ய அஞ்சுதல் தீச்செயல் புரிதலாகிய அகந்தைக்குத் தீச் செயலே செய்து பழகியவர் அஞ்ச மாட்டார்; பெரியோரே அஞ்சுவர். 201 தீச் செயல்கள் தீமையே விளைத்தலால், அத்தீச் செயல்கள் நெருப்பினும் கொடிதென அஞ்சப்பட வேண்டியதாம். 202 தம்மைத் துன்புறுத்துவோர்க்கும் தீமை செய்யாதிருத்தல், அறிவுடைய செயல்களுக்குள்ளெல்லாம் சிறந்தது என்பர் அறிஞர். 2O3 மறந்தும் பிறனொருவனுக்குக் கேடு எண்ணலாகாது. எண்ணினால், எண்ணியவனுக்கு அறக்கடவுள் கேடு எண்ணும். - 2O 4 'யான் ஒன்றும் இல்லாதவன் என்று கருதித் தீவினை செய்யலாகாது; செய்தால் மறுபடியும் மீண்டும் இல்லாதவனாகி விடுவான். 2O5 துன்பம் தரும் தீச் செயல்கள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தானும் பிறரிடம் தீவினைகள் புரியாதிருப்பானாக. 2O6 வேறு எப்பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; தீவினை என்னும் பகை மட்டும் நீங்காது பின் தொடர்ந்து வந்து வருத்தும். - 207 தீவினை செய்தவர் அழிதல், தன் நிழல் தன்னை விட்டு நீங்காமல் தன் காலடியிலேயே தங்கியிருத்தல் போல் தவறாது. 208 ஒருவன் உண்மையில் தன்னைத் தான் விரும்பு வானாயின், தீவினை வகைக்குள் எவ்வளவு சிறியதொரு தீச் செயலையும் நெருங்காதிருப்பானாக. 209 ஒருவன் தீவினைப் பக்கமே ஒடித் தீமை புரியாதிருப் பானாயின், அவன் கேடு அற்றவன் என்பதைத் தெரிந்து கொள்க. 21 O