பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 67 28. கூடாத போலிப் பொய் ஒழுக்கம் மனத்தில் வஞ்சகம் உடையவன் வெளியில் உண்மையானவன் போல் நடிக்கும் பொய் நடத்தையைக் கண்டு, அவனது உடலில் ஒன்றியிருக்கும் ஐந்து பூதங்களும் உள்ளே எள்ளி நகையாடும். 271 தன்மனம் தான் நன்கறிந்த குற்றத்தில் ஈடுபடின் விண் போல் உயர்ந்து தோன்றும் தவக்கோலம் என்ன பயன்தரும்? 272 மனத்தை வெல்லும் வலிமையற்றவன் வலிந்து கொண்டுள்ள தவ வடிவம், பசு யாரும் நெருங்காதபடிப் புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு புலியுருவில் பயிரை மேய்ந்தாற் போன்றது. 273 தவ உருவத்தில் மறைந்து கொண்டு தீமைகளைச் செய்தல், வேடன் புதரில் மறைந்து கொண்டு பறவைகளைப் பிடிப்பது போன்றது. 27.4 உலகப் பற்றுக்களை ஒழித்து விட்டோம் என்று சொல்பவரின் வஞ்சக நடத்தை, 'என் செய்தோம் என் செய்தோம் என்று பின்பு அவரே வருந்தும்படிப் பல்வகைத் துன்பங்களையும் விளைவிக்கும். 275 உள்ளே துறவாமல் வெளியே துறந்தவர் போல் வஞ்ச னையாக நடப்பவரை விடக் கொடியவர் இல்லை. 276 வெளியில் குண்டுமணி போல் சிவந்த காவி உடையுடன் காணப்படினும், மனம் குண்டுமணியின் மூக்குப் போல் கறுத்திருப்பவரையும் உலகம் கொண்டுள்ளது. շ77 மனத்திலே குற்றமிருக்க மாண்புடையவர் போல் நன்னீராடி வஞ்சித்து நடக்கும் மாந்தர் பலருளர். 278 நேராயிருக்கும் அம்பு செயலால் கொடியது; வளைவா யிருக்கும் யாழின் தண்டு செயலால் இனியது. அவ்வாறே நோன்பிகளையும், உருவால் மதியாது செய்யும் செயல் வகையால் மதிப்பிடுக. 279. உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தைக் கைவிடின் மொட்டையடித்தலும் முடியை நீட்டி வளர்த்தலுமாகிய வெளித் தோற்றம் வேண்டியதில்லை. 28 O