பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 69 29. களவு செய்யாமை எவராலும் இகழப்படாதிருக்க விரும்புபவன், எப்பேர்ப்பட்ட ஒரு பொருளையும் களவாட எண்ணாத படி தன் மனத்தைக் காப்பானாக. 281 மாற்றான் பொருளை வஞ்சகமாகக் களவாடுவோம் என்பதாக மனத்தால் நினைத்தலும் தவறே. 282 வஞ்சக வழியால் வரும் ஆக்கம் அளவு கடந்து வளர்வது போல் தோன்றிப் பின் கெட்டு விடும். 283 வஞ்சக வழியில் முற்றி முதிர்ந்த அவா, பின் பயன் விளைக்கும்போது அழியாத் துயரை அளிக்கும். 28.4 பிறர் பொருளை விரும்பி அவர் சேரும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரிடம், அருளைக் குறியாகக் கொண்டு எவ்வுயிரிடத்தும் அன்புடையவராயிருக்கும் பண்பு இராது. 285 களவு வழியில் முதிர்ந்த வேட்கையுடையவர், எதிலும் அளவு முறையுடன் நடந்து கொள்ள மாட்டார். 286 அளவறிந்து வாழும் ஆற்றல் உடையவரிடம், களவு என்னும் இருண்ட அறிவுச் செயல் இராது. 287 அளவு முறை அறிந்து ஒழுகுபவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்பதைப் போல, களவு செய்து பிழைப்பவரின் உள்ளத்தில் வஞ்சகம் நிலைத்து நிற்கும். 288 களவாடுதலைத் தவிர வேறு நல்லனவற்றை அறியாதவர்கள், அளவு முறை கடந்த தீமைகளைச் செய்து அங்கேயே அழிந்து போவார்கள். 289 களவு செய்வார்க்கு உடம்பிலே நீண்ட நாள் உயிர் நிலைத்து நிற்கும் உலக வாழ்வும் (ஆயுளும்) தவறிப் போகும் களவு செய்யாதோர்க்கோ தேவர் உலக வாழ்வும் தவறாது கிடைக்கும். 29 O