பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை IOI புதிய உரை: தம்முயற்சியால் பெற்ற பிள்ளைகள் தமக்கு உடல் போன்ற வர்கள். ஆகையால் அவரது பிள்ளைகளுக்குரிய உடலும், உடல் சக்தியும் அவர்கள் செய்கின்ற நல்வினையால் அமையும். விளக்கம்: பெற்றோரின் பொறுப்பை, மேலும் மேலும் அவர்மேல் சுமத்துகிறார் வள்ளுவர். பெற்றோர்களின் தேகவலிமை மனவலிமை ஒழுக்க நிலைமை போலவே குழந்தைகளுக்கும் அமையும். விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்காது. அதுபோலவே, தம் குழந்தை என்னும் பெருமை கொண்டாடுவோர் அக் குழந்தை தன் தேகத்தின் நகல் என்பதைப் பெற்றவர் ஒத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் செய்கிற செயல் தொடர்ந்து பலனை அளித்தால் அதற்கு வினை என்று பெயர். உடலுக்கு நலம் பயக்கும் வினை நல்வினை; உடலை அழிக்கும் வினை தீவினை. ஒரு குழந்தையின் தோற்றத்தைப் பார்க்கிறபோதே அது பெற்றோரின் பண்பைப் பறைசாற்றும் பாங்கை வெளிக்காட்டும். அதனால்தான் தம் பொருள் தம் மக்கள் தம்தம் வினை என்று சொற்களைப் போட்டு, பெற்றோரின் ஒழுக்கத்தைப் பெரிது படுத்திப் பாடியிருக்கிறார். 64. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் பொருள் விளக்கம்: தம் மக்கள் (ஐம் பொறியும் அழகுற அமையப் பெற்ற) தம் குழந்தைகள் சிறுகை = செய்கிற சிறுசிறு செயல்கள் (கை என்றால் செயல்) கூழ் அளாவிய தம் உடல்மேல் சேர்ந்து பற்றுகிறபோது தடவிக் கலக்கிறபோது ஆற்ற உண்டாகின்ற இன்பம் அமிழ்தினும் இனிதே உடலினும் உயிரினும் இனிக்கின்ற உவகையைவிட மேலும் சுவையூட்டும்.