பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 12 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு பொருள் விளக்கம்: அன்பிலார் = பிறரிடம் அன்பு செய்யாதவர்கள் எல்லாம் = இந்த உலகத்தையே தமக்கு உரியர் = தம்முடையது என்று நிரப்பிக் கொள்ள முயன்று தமுக்கடிப்பர் அன்புடையார் = உள்ளத்தால் அன்பு செலுத்துபவர்கள் என்பு - தனது உடல் (உள்ளம் உயிர்) எல்லாம் பிறர்க்கு = தம்மைச் சார்ந்த மனித குலத்திற்கு உரியர் = உரிமையாக்குவார்கள் சொல் விளக்கம்: எல்லாம் - அகிலம்; தமக்கு = தமுக்கு, நிரப்புதல் என்பு = உடல்; உரியர் = உரிமையாக்குவார். முற்கால உரை: அன்பிலார் எல்லாப் பொருளையுந் தமக்கே உரிமையாக்குவர். அன்புடையவர் பிறர்க்கு எலும் பையுங் கொடுக்க உரியராவர் என்பதாம். தற்கால உரை: அன்புடையவர்கள் தம் உயிர், உடல், உடைமை ஆகியவற்றைப் பிறர்க்குக் கொடுத்து உதவுவார்கள். ஆனால் அன்பில்லாதவர்கள் எதையும் பிறர்க்குக் கொடுத்து உதவமாட்டார்கள். புதிய உரை: பிறரிடம் அன்பு செய்ய இயலாத தன்னலம் நிறைந்தவர்கள் உலகமே தனது என்று தமுக்கடித்து தற்பெருமையுடன் வாழ்வார்கள். அன்பு பாராட்டுபவரோ தமது உடலாலும் அன்பு காட்டி, உதவுகிற செயல்பாடுகளுடன் தம்மை உரிமையாக்குவர். விளக்கம்: தமக்குரியர் என்பது தம்முடையதென்று நிரப்பிக் கொண்டு தமுக்கடிப்பர் என்பதாம். எல்லாரும் என்பும் உரியர் என்று எழுதியிருக்க, பரிமேலழகர் உரையில் உரியர் என்பதற்கு பதிலாக ஞரியர் என்று இருக்கிறது. ஞாலுதல் என்றால் முழங்குதல் என்று பொருள்.